பொது செய்தி

இந்தியா

'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க.,வின் வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையை நிறுத்தியது தி.மு.க.,வின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு கிடைத்த வெற்றி' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்க செய்ய வேண்டும் என்பது தி.முக.,வின் அடிப்படை கொள்கை.உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதை

புதுச்சேரி : 'புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையை நிறுத்தியது தி.மு.க.,வின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு கிடைத்த வெற்றி' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்க செய்ய வேண்டும் என்பது தி.முக.,வின் அடிப்படை கொள்கை.உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதை அடுத்து, புதுச்சேரி தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.இது, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற தி.மு.க.,வின் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இட ஒதுக்கீடு கொள்கைக்காக தி.மு.க., தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X