அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கை வித்தியாசமாகவே உள்ளது.வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் பாதுகாவலரின் 'அட்டென்ஷன்' மரியாதை; தன் உத்தரவை ஏற்கும் அரசு அதிகாரிகள்; ஓடி
MGR, DMK, ADMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கை வித்தியாசமாகவே உள்ளது.வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் பாதுகாவலரின் 'அட்டென்ஷன்' மரியாதை; தன் உத்தரவை ஏற்கும் அரசு அதிகாரிகள்; ஓடி வந்து கார் கதவை திறக்கும் அரசு பணியாளர்கள்; வி.ஐ.பி., 'எஸ்கார்டு' போலீஸ் வாகனம்... இதை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு பின் பார்த்தவுடன், அமைச்சர் துரைமுருகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

'நான் சர்வ அதிகாரம் படைத்த அமைச்சர்' என, ஆணவத்தின் உச்சியில் பேசுகிறார்.இப்போது, 'தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆர்., துரோகம் செய்து விட்டார்' என்று பேசி, இன்னொரு சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் படத்தில், தி.மு.க.,வின் கொடியை முதன் முதலாக திரையில் காட்டினார்.ஆணும், பெண்ணும் தி.மு.க., கொடியை ஏந்தியபடி திரும்பும், எம்.ஜி.ஆர்., பிக்சர்சின், 'லோகோ' படத்தின் துவக்கத்திலும், முடிவிலும் காட்டப்பட்டது.எம்.ஜி.ஆர்., நடித்த படங்களில் தி.மு.க.,வின் கொள்கை, அண்ணாதுரை புகழ் பரப்பப்பட்டன.


latest tamil newsதுரைமுருகன் காட்பாடியில் கபடி ஆடிக் கொண்டிருந்த காலம் அது; இந்த வரலாறு எல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆரிடம், 'தேர்தல் நிதி ஏதும் தர வேண்டாம். நீங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால், தி.மு.க.,வுக்கு 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும். உங்கள் பேச்சை கேட்டால், 10 லட்சம் பேர் மனம் திரும்புவர்' என்றார்.

கடந்த 1967ல் சட்டசபை தேர்தல் நேரத்தில், எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட போது தமிழகம் முழுதும் மக்களிடம் எழுந்த அனுதாப அலை, அண்ணாதுரையை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது.அப்போது அண்ணாதுரை, தன் அமைச்சரவை பட்டியலை ரா.செழியனிடம் தந்து, இதை எம்.ஜி.ஆரிடம் போய் காண்பித்து வாருங்கள் என்றார். அப்போது, எம்.ஜி.ஆர்., குண்டடி பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தான் சாதாரணமானவன், அண்ணாதுரை மிகப் பெரிய தலைவர். அவர் நம்மிடம் வந்து அமைச்சரவை பட்டியலை காண்பிக்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எம்.ஜி.ஆர்., ஆச்சரியப்பட்டார்.

எம்.ஜி.ஆரை, 'என் இதயக்கனி' என, அண்ணாதுரை வாயார வாழ்த்தினார். அவரின் மறைவிற்கு பின், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., ஆதரவுடன், கருணாநிதி முதல்வரானார்.அப்போது கருணாநிதி, எம்.ஜி.ஆரை மனதார வாழ்த்திய வாழ்த்து தான் இவை...குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே, முடியரசருக்கு இல்லாத செல்வாக்கு எல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே!

வென்றாரும், வெல்வாரும் இல்லா வகையில் எந்நாளும் ஒளி வீசும் தன்மதியே! தென்னாடும், தென்னவரும் உள்ளவரை மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும். உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.இப்போது சொல்லுங்க துரைமுருகன்... தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆரா துரோகம் செய்தார்?

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
14-அக்-202103:53:53 IST Report Abuse
Sathyanarayanan Subramanian நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா இது துரைக்கு பொருந்தும்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
13-அக்-202121:39:33 IST Report Abuse
KavikumarRam ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்து எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-அக்-202120:42:59 IST Report Abuse
Vena Suna துரோகம் செய்தது மக்கள் திலகத்திற்கு. அதனை யார் செய்தார் என்று எல்லோர்க்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X