பொது செய்தி

இந்தியா

இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: நாராயணசாமி

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால், புதுச்சேரியில் போராட்டம் வெடிக்கும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் அளித்துள்ள பேட்டி:புதுச்சேரியில், இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து

புதுச்சேரி : 'பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால், புதுச்சேரியில் போராட்டம் வெடிக்கும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் அளித்துள்ள பேட்டி:புதுச்சேரியில், இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா, காங்., பொதுச் செயலர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்து முதல்வர் கையெழுத்திட்ட பிறகே, மேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளார். இதற்கு, முதல்வர் ரங்க சாமி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் செய்த தவறுக்கு புதுச்சேரி மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.மாநில தேர்தல் ஆணையர் தாமஸ், தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் இரண்டு முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட் டுள்ளது. இது மாநில அரசுக்கு பெரும் இழுக்காகும். இதற்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையர் தாமஸ் பதவி விலக வேண்டும். அல்லது, அவரை அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.அவரை, எங்கள் ஆட்சியில் நியமித்தபோதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் தேர் தல் நடத்தினால், புதுச்சேரியில் போராட்டம் வெடிக்கும். காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் வீதியில் இறங்கி போராடும்.

உத்தரபிரதேச வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டர் ரூ.102, டீசல் ரூ.96 ஆகவும், சமையல் காஸ் சிலிண்டர் ரூ.950க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X