கள்ளக்குறிச்சியில் புதிய மின்மாற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் புதிய மின்மாற்றி

Added : அக் 13, 2021
Share
கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் 4.07 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கருணாபுரம் பகுதியில் உள்ள 5வது மின்மாற்றியில் அதிகபளு இருந்ததால், அப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவியது. இதையொட்டி 4 லட்சத்து 7 ஆயிரத்து 70 ரூபாய் மதிப்பில் 63 கே.வி.ஏ., திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் 310 மின்நுகர்வோர்

கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் 4.07 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கருணாபுரம் பகுதியில் உள்ள 5வது மின்மாற்றியில் அதிகபளு இருந்ததால், அப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவியது. இதையொட்டி 4 லட்சத்து 7 ஆயிரத்து 70 ரூபாய் மதிப்பில் 63 கே.வி.ஏ., திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் 310 மின்நுகர்வோர் பயனடைகின்றனர்.மின் மாற்றியை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, மின்பகிர்மான மேற்பார்வை செயற்பொறியாளர் கணேசன் தலைமை தாங்கினார்.

உதவி செயற் பொறியாளர் அருள்சாமி, உதவி மின்பொறியாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர், மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X