பொது செய்தி

இந்தியா

உரிமத்தொகை செலுத்தாததால் மொபைல் டவர்களுக்கு 'சீல்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சிக்கு உரிமத்தொகை செலுத்தாத 5 மொபைல்போன் டவர்களின் இணைப்பை துண்டித்து, 'சீல்' வைக்கப்பட்டது.புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மொபைல்போன் டவர்கள் இயங்கி வருகின்றன. இவை, புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்திடம் அனுமதி பெற்று, வீட்டின் மாடி மற்றும் வணிக வளாக மாடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த டவர்களுக்கு, 20
 உரிமத்தொகை செலுத்தாததால் மொபைல் டவர்களுக்கு 'சீல்'

புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சிக்கு உரிமத்தொகை செலுத்தாத 5 மொபைல்போன் டவர்களின் இணைப்பை துண்டித்து, 'சீல்' வைக்கப்பட்டது.

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மொபைல்போன் டவர்கள் இயங்கி வருகின்றன. இவை, புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்திடம் அனுமதி பெற்று, வீட்டின் மாடி மற்றும் வணிக வளாக மாடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த டவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட நகராட்சிக்கு ரூ.2.5 லட்சம் உரிமத் தொகை செலுத்த வேண்டும்.ஆனால், பெரும்பாலான மொபைல்போன் டவர்களுக்கு இந்த தொகையை செலுத்துவதில்லை.உரிமத் தொகையை செலுத்துமாறு, மொபைல் போன் டவர்களை நிர்வகிப்பவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும், தொகை செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் உரிமத் தொகை செலுத்தாத மொபைல்போன் டவர்களின் இணைப்பை துண்டித்து, 'சீல்' வைக்கும் பணியில் இறங்கி உள்ளது.இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி நகராட்சி பகுதி யில் உள்ள கட்டடங் களில் மொபைல்போன் டவர் நிறுவி இயக்குபவர் கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய உரிமத் தொகையை செலுத்துமாறு பல முறை வேண்டி, கேட்பு அறிக்கை (டிமான்ட் நோட்டீஸ்) அனுப்பப் பட்டது.

ஆனால், இதுவரை உரிமத்தொகை செலுத்தாததால், நேற்று புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், தலா ரூ.2.50 லட்சம் பாக்கி வைத்துள்ள முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன் பேட்டை, முதலியார்பேட்டை, முருங்கப்பாக்கம் பகுதிகளில் வீட்டு மாடியில் உள்ள 5 மொபைல்போன் டவர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, புதுச்சேரி நகராட் சிக்கு செலுத்த வேண்டிய உரிமத் தொகையை செலுத்த மொபைல்போன் டவர் உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X