பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டை, திருநாவலுாரில் ஓட்டு எண்ணும் பணி தாமதம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருநாவலுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் அன்னை தெரசா கல்லுாரியிலும் நேற்று நடந்தது.காலை 8:00 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11:40 மணியளவில் ஓட்டுப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருநாவலுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் அன்னை தெரசா கல்லுாரியிலும் நேற்று நடந்தது.

காலை 8:00 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11:40 மணியளவில் ஓட்டுப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு மேலாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 4 மணி நேரம் தாமதமாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியதால் வேட்பாளர்கள், முகவர்கள் அதிருப்தியடைந்தனர்.மதியம் 2:30 மணியைக் கடந்தும் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கு பதிவான ஓட்டு எண்ணிக்கை இறுதி செய்யப்படாமலும், அறிவிக்கப்படாமல் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X