இந்தியா

பருவ மழையை எதிர்கொள்ள அரசு ஆயத்தம் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தயார் படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிட முக்கிய துறைகளில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையளவு 1,250 மி. மீ., ஆகும். இதில் பெரும் பகுதி மழை, வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர்

புதுச்சேரி : ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தயார் படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிட முக்கிய துறைகளில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையளவு 1,250 மி. மீ., ஆகும். இதில் பெரும் பகுதி மழை, வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் பெய்யும்.

இந்நிலையில், இந்தாண்டில் ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை 1,141.4 மி.மீ., மழை பெய்துள்ளது.அதாவது, ஓராண்டு மழை, கடந்த 9 மாதங்களில் பெய்துள்ளது. இதனால், நீர் நிலைகள் ஓரளவிற்கு நிரம்பி உள்ளது.இந்நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவ காலத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.அதனையொட்டி கடந்த வாரம், கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.வருவாய், காவல், சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி, போக்குவரத்து, குடிமைப்பொருள் வழங்கல், மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பருவ மழையை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பற்றிய விபரங்களை விளக்கினர்.கூட்டத்தில் பேசிய கலெக்டர், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நகரப் பகுதியில் அனைத்து வடிகால் வாய்க்கால்களை துார் வாரவும், மழை நீரை சேமித்திட நீர் நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்களை துார் வாரவும் உத்தரவிட்டார். புயல் மற்றும் மழை நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்திட மின் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அதேபோன்று, பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி துறையினர், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், அரசு அலுவலகங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைத்திட உத்தரவிட்டார்.மேலும், பருவமழை காலங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.அதன்பேரில், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட் டுள்ளது.முக்கிய துறைகளில் வடகிழக்கு பருவமழைக்காக கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று, வடகிழக்கு பருவ மழை தொடர்பாக தனது துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.அப்போது, பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை உடனுக்குடன் அகற்றிட தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X