பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் முதல் சுற்று முடிவு 2:00 மணியளவில் அறிவிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.திருக்கோவிலுார் ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 23 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 96 பேரும், 60 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 192 பேரும், 432 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1172 பேர் என 517 பதவிகளுக்கு, 1,473 பேர்
 திருக்கோவிலுாரில் முதல் சுற்று முடிவு 2:00 மணியளவில் அறிவிப்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

திருக்கோவிலுார் ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 23 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 96 பேரும், 60 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 192 பேரும், 432 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1172 பேர் என 517 பதவிகளுக்கு, 1,473 பேர் போட்டியிட்டனர். ஒன்றியத்தில் 98 ஆயிரத்து 388 பேர் ஓட்டு போட்டனர்.ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணியளவில் திருக்கோவிலுார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் என்ன துவங்கினாலும், 9:00 மணிக்குப் பிறகே வேட்பாளர்களின் முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 10:00 மணிக்கு பிறகுதான் பாதுகாப்பு அறையில் இருந்த பெட்டிகள் கொண்டுவரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி துவங்கியது.இதன் காரணமாக மதியம் 1:00 மணிக்குப் பிறகு முதல் சுற்று முடிந்த நிலையில், 2:00 மணிக்கே வெளியானது. அதில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X