பொது செய்தி

இந்தியா

வாகன விபத்து குறித்து விசாரித்த ஊர்காவல்படை வீரர் மீது தாக்குதல் ஒருவர் கைது; தப்பியோடியவருக்கு வலை

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மதகடிப்பட்டில் வாகன விபத்து குறித்து விசாரிக்க சென்ற ஊர்காவல்படை வீரரை தாக்கிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, நேற்று மாலை 6:30 மணிக்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் மினி வேன் மோதிக் கொண்டன.அங்கு பணியில் இருந்த வில்லியனுார் போக்குவரத்து ஊர்காவல் படை வீரர் விநாயகம், விபத்து


புதுச்சேரி : மதகடிப்பட்டில் வாகன விபத்து குறித்து விசாரிக்க சென்ற ஊர்காவல்படை வீரரை தாக்கிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, நேற்று மாலை 6:30 மணிக்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் மினி வேன் மோதிக் கொண்டன.அங்கு பணியில் இருந்த வில்லியனுார் போக்குவரத்து ஊர்காவல் படை வீரர் விநாயகம், விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரித்தார். விபத்தில் சிக்கிய வாகனங்களை போட்டோ எடுத்தார்.

அப்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் வந்த எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த தன்ராஜ், 41, வினோத், 28; ஆகிய இருவரும், ஊர்காவல்படை வீரர் விநாயகத்திடம் தகராறு செய்தனர்.மது போதையில் இருந்த வினோத், விநாயகத்தின் மொபைல்போனை பறித்து, தாக்கியுள்ளார்.

தகவலறிந்து திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வினோத் தப்பிச் சென்றார்.ஊர்காவல் படை வீரரை வினோத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், ஊர்காவல் படை வீரரிடம் தகராறு செய்த தன்ராஜை கைது செய்தனர். தப்பிச் சென்ற வினோத்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X