பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மந்தம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் கடும் அவதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுஎண்ணிக்கை படு மந்தமாக நடந்ததால், வேட்பாளர்கள் மற்றும்முகவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருநாவலுார் ஆகிய 9 ஒன்றிய பகுதிகளுக்கு 19 மாவட்ட

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுஎண்ணிக்கை படு மந்தமாக நடந்ததால், வேட்பாளர்கள் மற்றும்முகவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருநாவலுார் ஆகிய 9 ஒன்றிய பகுதிகளுக்கு 19 மாவட்ட கவுன்சிலர், 180 ஒன்றிய கவுன்சிலர், 412 ஊராட்சித் தலைவர், 3,162 கிராம வார்டு உறுப்பினர் என மொத்தம் 3,773 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.இதில் 2 மாவட்ட கவுன்சிலர், 3 ஒன்றிய கவுன்சிலர், 29 ஊராட்சித் தலைவர், 454 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 488 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 3,285 பதவியிடங்களுக்கு, 10 ஆயிரத்து 727 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ஓட்டு எண்ணிக்கை மாவட்டத்தில் 9 மையங்களில் நேற்று நடந்தது. ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தின் 100 மீட்டர் துாரத்திற்குமுன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஓட்டு எண்ணும் பணியில், 3,810 அலுவலர்கள் ஈடுபட்டனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.

இதையடுத்து, மாலை 8:00 மணி வரை ஓட்டு எண்ணிக்கை மிகவும் மந்தமாக நடந்தது.இதனால், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கடும் அவதியடைந்தனர்.இரவு 9:30 மணி வரை 39 ஒன்றிய கவுன்சிலர், 108 ஊராட்சித் தலைவர் 482 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 892 பேரின் வெற்றி மட்டுமே அறிவிக்கப்பட்டது.இதில், கள்ளக்குறிச்சியில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க., 9 இடங்களிலும், அ.தி.மு.க., 1 இடத்திலும், ரிஷிவந்தியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க.,13 இடங்கள், அ.தி.மு.க., ஒரு இடத்திலும், மாவட்ட கவுன்சிலர்கள் 3வது வார்டில் தி.மு.க., வெற்றி பெற்றதாக 8வது வார்டில் தி.மு.க., முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் தியாகதுருகம் ஒன்றியத்தில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க., பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலையில் இருந்து வந்தனர். இதில், ஏராளமான இடங்களில்தி.மு.க.,வே முன்னிலை வகித்தது.தியாகதுருகம் சுறு...சுறு...தியாகதுருகம் ஒன்றியத்தில் மட்டும் நேற்று இரவு 8:00 மணிக்கு ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான அனைத்து இடங்களுக்கும் முடிவு அறிவித்து விட்டனர். அதே போன்று மாவட்ட கவுன்சிலருக்கான முடிவுகளையும் 9:00 மணிக்குள் அறிவித்து விட்டனர்.

இதற்கு காரணம் ஒன்றியத்தில் முன்னேற்றபாடாக ஒவ்வொரு ஓட்டுச்சீட்டு கலருக்கு ஏற்றாற்போல் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.நேற்று சீருடையுடன் பணி புரிந்ததால் எவ்வித குழப்பமும் இன்றி தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. இதே போன்று மற்ற ஒன்றியங்கள் பின்பற்றப்படாததால் குழப்பமும் காலதாமதமும் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X