பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் ரூ.10,500 'அபேஸ்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நெல்லித்தோப்பில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம், ரூ. 10,500 பணத்தை திருடிச் சென்ற இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் பாண்டியன்; பி.ஆர்.டி.சி. கண்டக்டர். இவரது மனைவி வேல்விழி, 47.கடந்த 9ம் தேதி தனது தோழி சரஸ்வதி என்பவருடன் ஸ்கூட்டரில் புதுச்சேரிக்கு சென்றார். வேல்விழியை நெல்லித்தோப்பு சிக்னல் அருகே

புதுச்சேரி : நெல்லித்தோப்பில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம், ரூ. 10,500 பணத்தை திருடிச் சென்ற இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் பாண்டியன்; பி.ஆர்.டி.சி. கண்டக்டர். இவரது மனைவி வேல்விழி, 47.கடந்த 9ம் தேதி தனது தோழி சரஸ்வதி என்பவருடன் ஸ்கூட்டரில் புதுச்சேரிக்கு சென்றார். வேல்விழியை நெல்லித்தோப்பு சிக்னல் அருகே சரஸ்வதி இறக்கி விட்டுள்ளார்.அங்கு பஸ்சுக்காக வேல்விழி காத்திருந்தார்.

அருகில் 2 பெண்கள் நின்றிருந்தனர். விழுப்புரம் பஸ் வந்து நின்றது. இரு பெண்களும், வேல்விழியை உரசிக் கொண்டு வேகமாக சென்று பஸ்சில் ஏறினர்.சந்தேகமடைந்த வேல்விழி தனது கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது, ரூ. 10,500 பணத்துடன் இருந்த மணி பர்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக உருளையன்பேட்டை போலீசில் வேல்விழி புகார் தெரிவித்தார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மணி பர்ஸ் திருடிச் சென்ற இரு பெண்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X