குப்பை கிடங்கில் லாரி மோதி டிரைவர் பலி

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : குருமாம்பட்டு குப்பை கிடங்கில் லாரி மோதி, டிரைவர் உயிரிழந்தார்.புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், குருமாம்பட்டில் உள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. தற்போது மழை காரணமாக, குப்பை கிடங்கு சேறும் சகதியுமாக உள்ளது.கிருமாம்பாக்கம் பேட், கம்பன் நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 45; டிரைவர். நேற்று மதியம், குப்பை

புதுச்சேரி : குருமாம்பட்டு குப்பை கிடங்கில் லாரி மோதி, டிரைவர் உயிரிழந்தார்.புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், குருமாம்பட்டில் உள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது.

தற்போது மழை காரணமாக, குப்பை கிடங்கு சேறும் சகதியுமாக உள்ளது.கிருமாம்பாக்கம் பேட், கம்பன் நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 45; டிரைவர். நேற்று மதியம், குப்பை ஏற்றிய லாரியை குருமாம்பட்டு குப்பை கிடங்கிற்கு ஓட்டிச் சென்றார்.லாரி, சேற்றில் சிக்கிக் கொண்டது. மீட்பதற்காக, உதவிக்கு ஆட்களை அழைக்க லாரியில் இருந்து இறங்கி, பின்பக்கம் சென்றார்.

அப்போது, குப்பையை கொட்டி விட்டு, பின்நோக்கி வந்த மற்றொரு லாரி அரிகிருஷ்ணன் மீது மோதியது. குப்பை கிடங்கு ஊழியர்கள், அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X