பொது செய்தி

இந்தியா

100 சைனிக் பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. ராணுவத்தில்
sainik schools, Union Cabinet, approves

புதுடில்லி: நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:

நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. ராணுவத்தில் அதிகாரிகளாக சேருவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் நாடு முழுதும் சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


latest tamil news



அதன்படி முதல் கட்டமாக மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாருடன் இணைந்து, 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை 2025 - 2026 ஆண்டு வரை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த இரண்டாம் கட்டத்தில் மத்திய அரசு தன் பங்காக 36 ஆயிரத்து 465 கோடி ரூபாய் செலவிடும்.பெரு நகரங்களில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், வரும் 2025 - 2026 ஆண்டு வரை, 2.77 லட்சம் கோடி ரூபாய் செலவிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அரசின் பங்கு 76 ஆயிரத்து 760 கோடி ரூபாய்.இதைத் தவிர ஊட்டச்சத்து அதிகம் உள்ள உரங்களுக்கு 28 ஆயிரத்து 655 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
13-அக்-202114:29:38 IST Report Abuse
Kumar ஒத்த சைனிக் பள்ளிகூடம் கூட தமிழகத்திற்கு வேண்டாம்.அங்கே ஹிந்தி சொல்லி கொடுப்பார்கள்.ஒழுக்கமாக இருக்கவேண்டும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
13-அக்-202113:31:49 IST Report Abuse
தமிழ்வேள் Please Make NCC Participation compulsory to all Schools -Particularly Govt / Municipal /Corporation Schools - viz., High Schools and Higher Secondary Schools. Make it compulsory to Colleges too..for Both Boys and Girls.....
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
13-அக்-202113:21:36 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது போல் நல்ல நல்ல திட்டங்கள் அரசு கொண்டுவர வேண்டும். அரசியல் வாதிக்காக டிவி முடக்கம் பொது நிறுவனம் முடக்கம் செய்து தனியார் நிறுவனம் செழிப்பு பெற மக்கள் பணம் இழக்க என்பவைகள் இருக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X