பொது செய்தி

தமிழ்நாடு

கோலியனுார், காணை ஒன்றியம் ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறு...

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது.இந்த தேர்தலில், மொத்தம் 11 லட்சத்து 69 ஆயிரத்து 929 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8:00 மணிக்கு 13 மையங்களில் துவங்கியது.கோலியனுார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது.இந்த தேர்தலில், மொத்தம் 11 லட்சத்து 69 ஆயிரத்து 929 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8:00 மணிக்கு 13 மையங்களில் துவங்கியது.கோலியனுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டுகள் எண்ணும் பணி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றியத்தில் 344 தபால் ஓட்டுகளில் முறையான படிவங்கள் வைத்திருந்த 314 ஓட்டுகள் மட்டுமே ஏற்கப்பட்டது.

இதில், 230 ஓட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 84 ஓட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.மொத்தம் 7 ரவுண்டுகளில், ஊராட்சி வார்டு உறுப்பினர் 30 மேஜைகளிலும், மற்ற பதவிகளுக்கு தலா 12 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டது.காணை ஒன்றியத்தில், 365 தபால் ஓட்டுகள் வந்ததில், 359 ஓட்டுகள் ஏற்கப்பட்டது. அதில், 6 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இந்த மையங்களை தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு பாதுகாப்பு பணிகளை டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X