பொது செய்தி

தமிழ்நாடு

கீழணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு 500 கன அடி கொள்ளிடத்தில் வெளியேற்றம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நிலங்களில் தண்ணீர் பிடிப்பு ஏற்பட்டு விவசாய பணிகள் பாதித்தன. கீழணைக்கு கல்லணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலுார் மாவட்டத்திலும் பெய்த பலத்த மழையால் கீழணைக்கு

காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் பரவலாக மழை பெய்கிறது.

இதனால் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நிலங்களில் தண்ணீர் பிடிப்பு ஏற்பட்டு விவசாய பணிகள் பாதித்தன. கீழணைக்கு கல்லணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலுார் மாவட்டத்திலும் பெய்த பலத்த மழையால் கீழணைக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 8.5 அடியாக உள்ளது.அணையில் இருந்து வடவாற்றில் 104, வடக்கு ராஜன் வாய்க்கால் 235, தெற்கு ராஜன் வாய்க்கால் 302 சிறு வாய்க்கால்களில் 115 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து நேற்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி அளவில் உபரி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது. டெல்டாவில் பலத்த மழையால் சம்பா சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் தேவையின்றி, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மழையால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 800 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று ஏரியின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாற்றின் ஜூரோ பாயிண்ட் மதகு மூலம் கான்சாகிப் வாய்க்காலில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்காலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், சிறகிழந்தநல்லுார், குமராட்சி பகுதியில் சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்ததால் கோப்பாடி மதகு, பழைய கொள்ளிடம், சிதம்பரம் பாலமான் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X