சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கோலியனுார் ஒன்றிய ஓட்டுகளை எண்ணும் மையத்தில், அ.தி.மு.க., பிரமுகர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.கோலியனுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ட்ராங் ரூமில் இருந்து ஓட்டுப் பெட்டிகளை கொண்டு வர அறை முன் தேர்தல் அலுவலர்கள் தயார்

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றிய ஓட்டுகளை எண்ணும் மையத்தில், அ.தி.மு.க., பிரமுகர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

கோலியனுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ட்ராங் ரூமில் இருந்து ஓட்டுப் பெட்டிகளை கொண்டு வர அறை முன் தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.அப்போது அங்கு வந்த அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், 'தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி அரசு அலுவலர்கள் வரலாம்' எனக்கேட்டு, அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின், அலுவலர்கள், அவரை சமாதானம் செய்த பின், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X