வெற்றி அறிவிப்பு தாமதம் கெடார் அருகே மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றி அறிவிப்பு தாமதம் கெடார் அருகே மறியல்

Added : அக் 13, 2021
Share
விழுப்புரம்: கெடார் அருகே ஊராட்சித் தலைவர் வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதமானதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அரியலுார், திருக்கை ஊராட்சித் தலைவர் பதவியில் போட்டியிட்ட வனித நாகராஜன் வெற்றி பெற்றார். இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக மைக்கில் வெளியிட தாமதமானது.இதனால், ஆத்திரமடைந்த வேட்பாளரின் ஆதவாளர்கள்

விழுப்புரம்: கெடார் அருகே ஊராட்சித் தலைவர் வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதமானதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அரியலுார், திருக்கை ஊராட்சித் தலைவர் பதவியில் போட்டியிட்ட வனித நாகராஜன் வெற்றி பெற்றார்.

இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக மைக்கில் வெளியிட தாமதமானது.இதனால், ஆத்திரமடைந்த வேட்பாளரின் ஆதவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 9:00 மணியளவில் திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.கெடார் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து, 9:30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X