பொது செய்தி

தமிழ்நாடு

ஒலக்கூர் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் சுற்றில் 16 ஒன்றிய கவுன்சிலர்களில் 3 இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களும், 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர்.ஒலக்கூர் ஒன்றியத்தில், கடந்த 6ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டு மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 52 பஞ்சாயத்து தலைவர்களுக்கான

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் சுற்றில் 16 ஒன்றிய கவுன்சிலர்களில் 3 இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களும், 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர்.

ஒலக்கூர் ஒன்றியத்தில், கடந்த 6ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டு மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 52 பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி திண்டிவனம் அண்ணா அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது.மொத்தமுள்ள 69,650 ஓட்டுகளில், 60,140 ஒட்டுக்கள் பதிவானது. பதிவான ஓட்டுகள் ஆறு சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் மொத்தமுள்ள 52 ஊராட்சித் தலைவர் தேர்தலில், கிராண்டிபுரம், கீழ்சேவூர், சேந்தமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 49 தலைவர்களுக்கான ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. இதில் முதல் சுற்றில் வடசிறுவளூர், செம்பாக்கம் உள்ளிட்ட 11 ஊராட்சித் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.இதேபோல் 16 ஒன்றிய கவுன்சிலர்களில், 1வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதலாக 457 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2வது வார்டில் தி.மு.க., வேட்பாளர் அன்பரசி வெற்றி பெற்றார். 13வது வார்டில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராஜாராம், சுயேச்சை வேட்பாளரை விட 284 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.7வது வார்டில் தி.மு.க., வேட்பாளர் மனோசித்ரா அ.தி.மு.க., வேட்பாளரை விட முதல் சுற்றில் கூடுதலாக 2,093 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.பதிவான ஓட்டுக்கள், ஒலக்கூர் ஒன்றிய தேர்தல் அதிகாரி ஜானகி மேற்பார்வையில் நடந்தது. ஓட்டுப்பதிவு பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி.,ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி.,தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X