பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணாடத்தில் 14 சவரன் நகை திருட்டு

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சி, வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; இவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வசிக்கிறார். தந்தை ஆறுமுகம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி, சிகிச்சைபெற்றார். அவரை அழைத்து

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சி, வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; இவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வசிக்கிறார். தந்தை ஆறுமுகம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி, சிகிச்சைபெற்றார். அவரை அழைத்து வர வினோத்குமார் சென்னை செல்ல வேண்டி இருந்தது. இதனால் நேற்று முன் தினம் மாலை தனது மனைவி ரம்யாவை அரியலுார் மாவட்டம், முள்ளுக்குறிச்சியில் உள்ள மாமனார் வீட்டில் விட்டு பெண்ணாடம் வந்தார். இரவு 9:30 மணியளவில் வீட்டை பூட்டி, சென்னைக்கு சென்றார்.நேற்று மாலை 6:00 மணியளவில் அருகிலுள்ள ரங்கநாயகி என்பவர், வீடு திறந்து கிடப்பதாக வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

இரவு 7:30 மணியளவில் ரம்யா, அவரது தாய் ஆகியோர் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 14 சவரன் நகை மற்றும் 120 கிராம் எடையுள்ள வெள்ளிக்காசுகள் திருடு போயிருந்தன. இது குறித்து வினோத்குமார் மனைவி ரம்யா கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X