பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல்: பொருட்கள் சேதம்: ஓட்டு எண்ணும் பணி நிறுத்தம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை ஒன்றிய ஓட்டுகள் எண்ணும் போது தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதலால் பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதனால், ஓட்டு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியம், வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரிப் பள்ளியில் ஓட்டு எண்ணும் பணி நடந்தது.மூன்றாவது சுற்றில், கரியாலுார், இன்னாடு ஆகிய ஊராட்சிகளுக்கான


கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை ஒன்றிய ஓட்டுகள் எண்ணும் போது தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதலால் பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது.

இதனால், ஓட்டு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியம், வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரிப் பள்ளியில் ஓட்டு எண்ணும் பணி நடந்தது.மூன்றாவது சுற்றில், கரியாலுார், இன்னாடு ஆகிய ஊராட்சிகளுக்கான ஓட்டு எண்ணும் பணி நடந்தது.ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில், அ.தி.மு.க., வேட்பாளர் கரியாலுார் பாக்யராஜ் 240 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அ.தி.மு.க., இன்னாடு கோவிந்தன் 25 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.ஆனால், ஓட்டு எண்ணும் பணி 6:30 மணியளவில் முடிந்தும் அதிகாரிகள் முடிவை அறிவிக்காமலும், சான்றிதழ் தராமலும் காலதாமதம் செய்தனர்.ஆத்திரமடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 7:00 மணிக்கு பிற வார்டுகளுக்கான ஓட்டு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.தொடர்ந்து தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே இரவு 10:00 மணியளவில் வாக்குவாதம் உருவாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமரா, கட்டடத்தின் கேட், கதவுகள், சேர்களை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து மையத்தில் 11:00 மணிக்கு மேலும் பிரச்னை நீடித்ததால் பதற்றம் நிலவியது. ஓட்டு எண்ணும் பணியும் தொடராமல் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X