பொது செய்தி

தமிழ்நாடு

முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் வேட்பாளர்கள், முகவர்கள் அவதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சியில் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகும் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் காலதாமதம் செய்ததால், வேட்பாளர்கள், முகவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.செஞ்சி ஒன்றிய ஓட்டுகள் காரியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரில் நேற்று எண்ணப்பட்டது. இதில், பதிவான ஓட்டுகள் எத்தனை, அதில் செல்லாதவை எத்தனை, வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு என்பதை எண்ணி முடிவை மாலை

செஞ்சி : செஞ்சியில் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகும் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் காலதாமதம் செய்ததால், வேட்பாளர்கள், முகவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

செஞ்சி ஒன்றிய ஓட்டுகள் காரியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரில் நேற்று எண்ணப்பட்டது. இதில், பதிவான ஓட்டுகள் எத்தனை, அதில் செல்லாதவை எத்தனை, வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு என்பதை எண்ணி முடிவை மாலை வரை அறிவிக்கவில்லை.இதே போல் பெட்டிகளில் இருந்த ஓட்டுகளை எண்ணத் துவங்கி முதல் சுற்று மதியம் 1:00 மணியளவில் முடிந்தது. அடுத்தடுத்து 3 சுற்றுகள் மாலை 5:00 மணிக்குள் முடிந்தது.இதில் தபால் ஓட்டுகளை சேர்த்த பின்னரே இறுதி முடிவு அறிவிக்க முடியும். தபால் ஓட்டு அறிவிக்காததால் மாலை 5:00 மணி வரை எண்ணப்பட்ட முடிவுகளையும் அறிவிக்கவில்லை. ஓட்டுகள் எண்ணப்பட்ட பின்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் தாமதம் செய்ததால் முடிவைத் தெரிந்து கொள்ள மையத்தின் வெளியே வேட்பாளர்களும், முகவர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X