பொது செய்தி

இந்தியா

ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.,வினர் 'மிஸ்சிங்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்களைத் தவிர, கட்சியினர் யாரும் வரவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - வி.சி., உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க.,வினர் ஆர்வமுடன்


விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்களைத் தவிர, கட்சியினர் யாரும் வரவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

இத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - வி.சி., உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க.,வினர் ஆர்வமுடன் அதிக இடங்களில் போட்டியிட்டனர். எதிர்கட்சியான அ.தி.மு.க.,வினர் பெரும்பாலான இடங்களில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின்போது, விழுப்புரம் மாவட்டத்தில், ஓட்டு எண்ணும் மையங்களில் தி.மு.க., வேட்பாளர்களுடன் அக்கட்சி ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், அ.தி.மு.க.,வில் வேட்பாளர்களைத் தவிர்த்து, கட்சியினர் யாரும் வரவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X