உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மந்தம் காலதாமதத்தால் வேட்பாளர்கள் அவதி-| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மந்தம் காலதாமதத்தால் வேட்பாளர்கள் அவதி-

Added : அக் 13, 2021
Share
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடந்ததால், வேட்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில், 22

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடந்ததால், வேட்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 22 கிராம ஊராட்சித் தலைவர், 357 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 5,715 பதவிகளுக்கு 19 ஆயிரத்து 982 பேர் போட்டியிட்டனர்.இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை மாவட்டத்தில் 13 மையங்களில் நேற்று நடந்தது. இதையடுத்து ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜன்ட்டுகள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தின் 100 மீட்டர் துாரத்திற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஓட்டு எண்ணும் பணியில், 5,605 அலுவலர்கள் ஈடுபட்டனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து, மாலை 6:00 மணி வரை ஓட்டு எண்ணிக்கை மிகவும் மந்தமாக நடந்தது.இதனால், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

இரவு 7:00 மணி வரை 49 ஒன்றிய கவுன்சிலர், 165 ஊராட்சி தலைவர்கள், 883 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 1,097 பேரின் வெற்றி மட்டுமே அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 4,609 பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வந்தது.இதில், ஒலக்கூரில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க.,3 இடங்களிலும், பா.ம.க., 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும், மாவட்ட கவுன்சிலர் 27வது வார்டில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலையில் இருந்து வந்தனர். இதில், ஏராளமான இடங்களில் தி.மு.க., முன்னிலை வகித்தது.விக்கிரவாண்டியில் மாலை 6:00 மணி வரை அறிவித்த முடிவுகளில் 5 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., முகிலன், அருணாசலம், பாரதி சுரேஷ், ஜீவிதா ரவி, சத்யா கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றனர். 18வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளர் முன்னிலை வகித்தார்.
நமது நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X