பொது செய்தி

இந்தியா

4 வீடுகளில் நகை, பணம் திருட்டு வடலுாரில் போலீஸ் விசாரணை

Added : அக் 13, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுாரில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து 24 சவரன் நகை, 52 ஆயிரம் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் வடலுார் ராகவேந்திரா சிட்டி 6வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார், 52; இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் நேற்று முன் தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று, நேற்று காலை திரும்பி

வடலுார் : வடலுாரில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து 24 சவரன் நகை, 52 ஆயிரம் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் வடலுார் ராகவேந்திரா சிட்டி 6வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார், 52; இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர் நேற்று முன் தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று, நேற்று காலை திரும்பி வந்தார். பீரோவை உடைத்து 18 சவரன் நகை, ரூ 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் மனைவி அந்தோணிமேரி, 62; வீட்டின் பீரோவை உடைத்து 6 சவரன் நகை ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் என்.எல்.சி.,ஆபீசர் நகரில் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா வீட்டில் அரை சவரன் நகையை திருடிச் சென்றனர்.

அதே பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சக்கரவர்த்தி வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்று சிறிது துாரத்தில் இருந்த புதர் அருகே விட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த போலீசார் சென்று விசாரித்து வருகின்றனர். வடலுாரில் ஒரே இரவில் 4 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X