பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாற்றில் தற்காலிக சாலை துண்டிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக சவுந்திரசோழபுரம் வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டித்து, இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை
 வெள்ளாற்றில் தற்காலிக சாலை துண்டிப்பு

பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக சவுந்திரசோழபுரம் வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் போக்குவரத்து துண்டித்து, இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம், வடகரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இச்சாலையை பயன்படுத்தினர்.சில தினங்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் தொடர் கனமழை பெய்கிறது. ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழை நீரால், நேற்று பகல் 12:00 மணியளவில் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், கடலுார் - அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் வெளியூர் செல்ல முடியாமல், முருகன்குடி வெள்ளாறு மேம்பாலம் வழியாக 10 கி.மீ., துாரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதனால் இரு மாவட்ட கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.மற்றொரு சாலைஅதே போல் செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக செம்மண் சாலையும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலுார், அரியலுார் மாவட்ட கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X