பொது செய்தி

தமிழ்நாடு

பெண் தீக்குளிக்க முயற்சி; எஸ்.பி., ஆபீசில் பரபரப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி சுமதி, 45; இவர், கடலுார் எஸ்.பி., அலுவலக நுழைவு வாயில் அருகில் நேற்று மாலை 5:00 மணிக்கு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கு முயன்றார். போலீசார், தடுத்து விசாரணை நடத்தினர். சுமதியின் தம்பி வெங்கடேசன் தனது

கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி சுமதி, 45; இவர், கடலுார் எஸ்.பி., அலுவலக நுழைவு வாயில் அருகில் நேற்று மாலை 5:00 மணிக்கு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கு முயன்றார்.

போலீசார், தடுத்து விசாரணை நடத்தினர். சுமதியின் தம்பி வெங்கடேசன் தனது தாயிடம் வீட்டை எழுதித் தருமாறு கேட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. தீக்குளிக்க முயன்ற சுமதி மீது கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X