பொது செய்தி

தமிழ்நாடு

முகவரி நிரப்பப்படாத தபால் ஓட்டுகள் ஓட்டு எண்ணும் அலுவலர்கள் சிரமம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் தபால் ஓட்டுகளில் ஓட்டளித்தவரின் முகவரி நிரப்பப்படாததால் அதிகாரிகள் சிரமமடைந்தனர்.ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.பூத் முகவர்கள் முன்னிலையில் தபால் ஓட்டுகள் கொட்டப்பட்டு ஊராட்சி வாரியாக பிரித்து வைக்கும்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் தபால் ஓட்டுகளில் ஓட்டளித்தவரின் முகவரி நிரப்பப்படாததால் அதிகாரிகள் சிரமமடைந்தனர்.ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.பூத் முகவர்கள் முன்னிலையில் தபால் ஓட்டுகள் கொட்டப்பட்டு ஊராட்சி வாரியாக பிரித்து வைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.அதில் நிறைய தபால் ஓட்டுகளில் ஓட்டளித்தவரின் முகவரி நிரப்பப்படவில்லை.சில தபால் ஓட்டுகளில் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் தபால் ஓட்டினைப் பிரித்து, பேலட் பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த ஊராட்சியை பார்த்து, அதன் பிறகே எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு காலதாமதம் ஆனதுடன் அதிகாரிகள் சிரமமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X