பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் : ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளரின் சகோதரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.காணை ஒன்றியம், வீரமூர் ஊராட்சி மன்ற தலைவராக ஜெய்சங்கர் வென்றதாக, விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 5.00 மணிக்கு, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து, இரவு 10.00 மணிக்கு, திடீரென ஜெய்சங்கரை

விழுப்புரம் : ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளரின் சகோதரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.காணை ஒன்றியம், வீரமூர் ஊராட்சி மன்ற தலைவராக ஜெய்சங்கர் வென்றதாக, விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாலை 5.00 மணிக்கு, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து, இரவு 10.00 மணிக்கு, திடீரென ஜெய்சங்கரை எதிர்த்து தேர்தலில் நின்ற வேட்பாளர் ஒருவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.இதையறிந்த, ஜெய்சங்கரின் சகோதரிகள் ஜெயலட்சுமி, மஞ்சுளா ஆகியோர் அரசு கலைக் கல்லுாரி ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில், தங்களின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X