சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல வணிக வளாகத்தில் கொள்ளை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சேத்துப்பட்டு : சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்தில், 72 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால், 45. இவர், ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், வாகன பேட்டரிகளுக்கு, அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இதன் தலைமை நிர்வாக

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்தில், 72 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால், 45. இவர், ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், வாகன பேட்டரிகளுக்கு, அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இதன் தலைமை நிர்வாக அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் செயல்படுகிறது.வழக்கம்போல், நேற்று காலை ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்க வந்தபோது, கதவு திறந்து கிடந்தது.

அலுவலகத்தில் இருந்த 72 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.இது குறித்து, சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.பிரபல வணிக வளாகத்தில், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X