பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் நடவடிக்கையால் வேட்பாளர்கள், முகவர்கள் அனுமதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய ஓட்டுகள் எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் காத்திருந்த வேட்பாளர், முகவர்கள் கலெக்டர் நடவடிக்கையால் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.விக்கிரவாண்டி ஒன்றியத்தல் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் பள்ளியில் நடந்தது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடியும் நேரத்தில் கலெக்டர் மோகன் மையத்தை ஆய்வு
 கலெக்டர் நடவடிக்கையால்  வேட்பாளர்கள், முகவர்கள் அனுமதி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய ஓட்டுகள் எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் காத்திருந்த வேட்பாளர், முகவர்கள் கலெக்டர் நடவடிக்கையால் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி ஒன்றியத்தல் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் பள்ளியில் நடந்தது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடியும் நேரத்தில் கலெக்டர் மோகன் மையத்தை ஆய்வு செய்தார்.அப்போது சர்வீஸ் சாலையில் அடுத்த சுற்றுக்கான முடிவை அறிய வேட்பாளர்கள், முகவர்கள் வெயிலில் காத்துக் கொண்டிருந்தனர்.இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த கலெக்டர் மோகன் பள்ளி வளாகத்தில் ஷாமியானா பந்தல் அமைத்து சேர்கள் போடப்பட்டு, வேட்பாளர் மற்றும் முகவர்கள் அமர நடவடிக்கை எடுத்தார்.இப்பணியை கலெக்டர் ஒன்றரை மணி நேரம் அப்பகுதியிலேயே இருந்து மேற்பார்வையிட்டு, வேட்பாளர் மற்றும் முகவர்களை உள்ளே அமர வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X