பொது செய்தி

தமிழ்நாடு

கீழச்சேரி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கீழச்சேரி : கீழச்சேரி ஊராட்சியில், ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வருவாய் துறையினர் நேற்று அளவீடு செய்தனர்.கீழச்சேரி ஊராட்சியில், அனுமதி பெறாமல், காற்றாலை தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை, ஊராட்சிக்கு சொந்தமான சர்வே எண்: 11, 60, 53/3 மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான சர்வே எண் 257, 258 ஆகிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, ஊராட்சி

கீழச்சேரி : கீழச்சேரி ஊராட்சியில், ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வருவாய் துறையினர் நேற்று அளவீடு செய்தனர்.

கீழச்சேரி ஊராட்சியில், அனுமதி பெறாமல், காற்றாலை தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை, ஊராட்சிக்கு சொந்தமான சர்வே எண்: 11, 60, 53/3 மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான சர்வே எண் 257, 258 ஆகிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, ஊராட்சி நிர்வாகம் புகார் செய்திருந்தது.இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், வருவாய்த் துறையினருக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என, புகார் மனு அளித்தார்.

இதையடுத்து, நேற்று, திருவள்ளூர் மண்டல துணை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் விவிதா மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்தனர்.அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சமர்ப்பிப்போம்.வட்டார வளர்ச்சி அலுவலர்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆய்வு மேற்கொண்ட மண்டல துணை தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X