பொது செய்தி

தமிழ்நாடு

496 பள்ளி வாகனம் இயங்க அனுமதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறையினர், 496 பள்ளி வாகனம் இயங்க அனுமதி அளித்து உள்ளனர்.திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன் தலைமை வகித்தார்.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் அலுவலர்கள், வாகனங்களை ஆய்வு செய்தனர்.இது குறித்து,

திருவள்ளூர் : திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறையினர், 496 பள்ளி வாகனம் இயங்க அனுமதி அளித்து உள்ளனர்.

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன் தலைமை வகித்தார்.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் அலுவலர்கள், வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இது குறித்து, போக்குவரத்து துறையினர் கூறியதாவது:பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, 95 பள்ளிகளைச் சார்ந்த, 496 வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.கொரோனா தொற்று காரணமாக, முதல் கட்டமாக, 40 வாகனங்கள் நேற்று பரிசோதிக்கப்பட்டன.

தொடர்ந்து, மீதம் உள்ள வாகனங்கள் பரிசோதனை செய்யப்படும். மேலும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், துண்டு பிரசுரம் மற்றும் கையேடு வழங்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X