பொது செய்தி

தமிழ்நாடு

நீர் வெளியேறும் இடத்தில் 'போட்டோ ஷூட்' ; பூண்டியில் உயிர் பலி ஏற்படும் அபாயம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை :பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரி நீர் திறப்பால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீரில் குளிப்பது, போட்டோ எடுப்பது குறித்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.ஆனால், பூண்டியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில், போட்டோ எடுப்பது, குளிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி
நீர் வெளியேறும் இடத்தில் 'போட்டோ ஷூட்' ; பூண்டியில் உயிர் பலி ஏற்படும் அபாயம்

ஊத்துக்கோட்டை :பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரி நீர் திறப்பால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீரில் குளிப்பது, போட்டோ எடுப்பது குறித்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், பூண்டியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில், போட்டோ எடுப்பது, குளிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க முழு கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், 2.8 டி.எம்.சி., நீர் உள்ளது. அம்மபள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மற்றும் மழை நீரால், வினாடிக்கு, 1,000 கன அடிநீர் வந்து கொண்டு இருக்கிறது.

தொடர் நீர்வரத்தால் பாதுகாப்பு கருதி, அங்குள்ள இரண்டு மதகுகள் வழியே வினாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் உள்ளிட்டோர் நீரில் குளிப்பது, போட்டோ எடுப்பது குறித்து கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனாலும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, மதகு வழியே சீறி பாய்ந்து வரும் நீரில், ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் பெற்றோர் போட்டோ எடுப்பதும், சிலர் குளிப்பதுமாக உள்ளனர்.உயிர் பலி ஏற்படுவதற்கு முன், கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X