பச்சையப்பன் கல்லுாரிக்கு மத்திய அரசு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லுாரிக்கு மத்திய அரசு விருது

Added : அக் 13, 2021
Share
காஞ்சிபுரம் : மத்திய அரசின் 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை, தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு பாராட்டு சான்றிதழும், 1.75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், உன்னத் பாரத் அபியான் எனப்படும் மேம்படுத்தப்பட்ட இந்தியா திட்டம், 2018 முதல்

காஞ்சிபுரம் : மத்திய அரசின் 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை, தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு பாராட்டு சான்றிதழும், 1.75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், உன்னத் பாரத் அபியான் எனப்படும் மேம்படுத்தப்பட்ட இந்தியா திட்டம், 2018 முதல் செயல்பட்டு வருகிறது.இத்திட்டமானது, உயர்கல்வி நிறுவனங்களின் மூலம், கிராமங்களை தத்தெடுத்து கல்வி, இயற்கை விவசாயம், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு போன்ற திட்டங்களை செயல்படுத்தி, கிராம வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி, களியனுார், முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை மற்றும் கருக்குப்பேட்டை ஆகிய கிராமங்களை தத்தெடுத்து, இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.தேசிய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்தும் கல்லுாரிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையின் 2020ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின், உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பூபாலனுக்கு, பாராட்டு சான்றிதழும், 1.75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்கப்பரிசு, கல்லுாரி தத்தெடுத்துள்ள ஐந்து கிராமங்களிலும் பெண்கள் மேம்பாடு, இயற்கை விவசாயம், சோலார் பல்ப் தயாரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக, ஒருங்கிணைப்பாளர் பூபாலன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X