எல்.இ.டி., திரை அமைக்காததால் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்.இ.டி., திரை அமைக்காததால் ஏமாற்றம்

Added : அக் 13, 2021
Share
காஞ்சிபுரம் : ஓட்டு எண்ணும் மையங்களில் எல்.இ.டி., திரை அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், எங்கும் திரை அமைக்காததால், முகவர்கள் ஏமாற்றமடைந்தனர்.ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணும் பணி, நேற்று நடந்தது. தேர்தல் முடிவுகளை, வேட்பாளர்கள், அவர்களுடைய முகவர்கள், உறவினர்கள் அறிந்து கொள்ள அண்ணா பொறியியல் கல்லுாரியின் வெளியே, நுழைவாயில் என சில இடங்களில் எல்.இ.டி., திரை

காஞ்சிபுரம் : ஓட்டு எண்ணும் மையங்களில் எல்.இ.டி., திரை அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், எங்கும் திரை அமைக்காததால், முகவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணும் பணி, நேற்று நடந்தது. தேர்தல் முடிவுகளை, வேட்பாளர்கள், அவர்களுடைய முகவர்கள், உறவினர்கள் அறிந்து கொள்ள அண்ணா பொறியியல் கல்லுாரியின் வெளியே, நுழைவாயில் என சில இடங்களில் எல்.இ.டி., திரை அமைக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம், நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

ஆனால் ஓட்டு எண்ணும் மையத்தில், எந்த இடத்திலும் வேட்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், எல்.இ.டி., திரை அமைக்கப்படவில்லை.தேர்தல் முடிவுகள் அறிய, வேட்பாளர்களின் முகவர்கள் பல இடங்களில் தேடியும், திரை எங்கும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X