பரபரப்பான வில்பட்டியில் தி.மு.க., ஆதரவாளர் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரபரப்பான வில்பட்டியில் தி.மு.க., ஆதரவாளர் வெற்றி

Added : அக் 13, 2021
Share
கொடைக்கானல் : கொடைக்கானல் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி வில்பட்டி. 12 ஆயிரம் ஓட்டுகள் உள்ளது. இவ்வூராட்சி தலைவர் குப்பம்மாள் சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில், கட்சி சின்னம் இல்லாவிடினும், தி.மு.க., அ.தி.மு.க., ஆதரவு அளித்ததால் இருதரப்பினருக்கு இடையே பலத்த போட்டி நடந்தது.கட்சி பிரமுகர்கள் பலரும் சுற்றி சுழன்று பணியாற்றியதால், நகராட்சி தேர்தல்

கொடைக்கானல் : கொடைக்கானல் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி வில்பட்டி. 12 ஆயிரம் ஓட்டுகள் உள்ளது.

இவ்வூராட்சி தலைவர் குப்பம்மாள் சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில், கட்சி சின்னம் இல்லாவிடினும், தி.மு.க., அ.தி.மு.க., ஆதரவு அளித்ததால் இருதரப்பினருக்கு இடையே பலத்த போட்டி நடந்தது.கட்சி பிரமுகர்கள் பலரும் சுற்றி சுழன்று பணியாற்றியதால், நகராட்சி தேர்தல் போல நடந்தது. பணப்பட்டு வாடாவும் குறைவின்றி இருந்தது.

நேற்று ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., ஆதரவு பெற்ற பாக்கியலட்சுமி 4034 ஓட்டுகளும், அ.தி.மு.க., ஆதரவு பெற்ற செல்வராணி 1720 ஓட்டுகளும் பெற்றனர். இதில் 2,314 ஓட்டு வித்தியாசத்தில் பாக்கியலட்சுமி வென்றதாக தேர்தல் அலுவலர் விஜயசந்திரிகா அறிவித்தார்.ஒட்டன்சத்திரம்சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க., ஆதரவு பெற்ற சாரதா 2214 ஓட்டுகள் பெற்று 1612 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்த மார்க்சிஸ்ட் ஆதரவு வேட்பாளர் மாலா 602 ஓட்டுகள் பெற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X