பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் கொல்லி திரவ உரம் தயாரிக்கலாம்!

Added : அக் 13, 2021
Share
Advertisement
பயிர் நோய்களுக்கான உயிர் கொல்லி திரவ தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நா.ஜெயபால் கூறியதாவது:நெல் பயிரை தாக்கக்கூடிய இலைப்புள்ளி நோய், குலை நோய், இலை கருகல் நோய், இலை உரை அழுகல் நோய்; மணிலா மற்றும் பயறு வகை பயிர்களை தாக்கக் கூடிய வேர் அழுகல் நோய், வாடல் நோய், கழுத்து அழுகல் நோய் போன்றவற்றை, குறைந்த செலவில்

பயிர் நோய்களுக்கான உயிர் கொல்லி திரவ தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நா.ஜெயபால் கூறியதாவது:நெல் பயிரை தாக்கக்கூடிய இலைப்புள்ளி நோய், குலை நோய், இலை கருகல் நோய், இலை உரை அழுகல் நோய்; மணிலா மற்றும் பயறு வகை பயிர்களை தாக்கக் கூடிய வேர் அழுகல் நோய், வாடல் நோய், கழுத்து அழுகல் நோய் போன்றவற்றை, குறைந்த செலவில் விவசாயிகளே கட்டுப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய், ஒரு லிட்டர் வடித்த சாதத்தின் கஞ்சி, ஒரு சிட்டிகை கரித்துாள் கலந்து, 250 மில்லி பிடிக்கக்கூடிய பாட்டில்களில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.அதன் வாய் பகுதியை, காற்று புகாதவாறு பஞ்சு வைத்து அடைத்து, பாட்டில்களை 40 நிமிடம் அல்லது மூன்று விசில் வரும் வரை குக்கரில் சூடுபடுத்த வேண்டும்.நன்கு ஆறியதும், காற்று புகாத பெட்டியில் வைத்து, 'ஸ்பிரீட் லேம்ப்' உதவியுடன், தாய் திரவமான 'டி-விரிடி' மற்றும் 'சூடோமோனாஸ்' இவற்றில் ஏதேனும் ஓர் உரத்தை சேர்க்க வேண்டும்.

பின் ஈர மணல் நிரம்பிய பிளாஸ்டிக் வட்ட தட்டில் அவற்றை வைக்க வேண்டும். தினம் ஒரு வேளை, பாட்டில்களில் உள்ள திரவத்தை கலக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 5 மில்லி திரவம் வீதம் கலந்து, காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கலாம். 500 மில்லி டி-விரிடி மற்றும் சூடோமோனாஸ்சை, 50 தொழுஉரத்துடன் கலந்து பயிர்களுக்கு இடுவதால் மேற்கண்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:87605 51094

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X