பொது செய்தி

தமிழ்நாடு

குளிரில் விளையும் ஏலக்காய்

Added : அக் 13, 2021
Share
Advertisement
குளிர் பிரதேசங்களில் விளையும், ஏலக்காய் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், குளிர் பிரதேசங்களில் விளையும், சில ஏலக்காய் செடிகளை நட்டுள்ளேன்.ஏலக்காய் செடி கொடுத்த ஆந்திர மாநில விவசாயி ஒருவர், 'நம் தோட்டத்தை நிழல் ஏற்படும் வகையில் உருவாக்கினாலே குளிர்

குளிர் பிரதேசங்களில் விளையும், ஏலக்காய் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், குளிர் பிரதேசங்களில் விளையும், சில ஏலக்காய் செடிகளை நட்டுள்ளேன்.

ஏலக்காய் செடி கொடுத்த ஆந்திர மாநில விவசாயி ஒருவர், 'நம் தோட்டத்தை நிழல் ஏற்படும் வகையில் உருவாக்கினாலே குளிர் பிரதேசங்களில் விளையும் பலவற்றை விளைவிக்கலாம். அதற்கு ஏற்ப, தோட்டத்தின் சூழ்நிலை உருவாக்க வேண்டும்' என்றார்.அவரின் அறிவுரை ஏற்று, மா, கொய்யா தோட்ட மர நிழலில், சில ஏலக்காய் செடிகளை சாகுபடி செய்துஉள்ளேன். பூ எடுக்கிறது; காய்ப்புக்கு வரவில்லை. மகசூல் பொறுத்து, சாகுபடி விரிவு செய்ய உள்ளேன்.

இரண்டு ஏலக்காய்கள் ௫ ரூபாய்க்கு, இன்று சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விளைப்பொருளை நாமே சந்தைப்படுத்தினால், கூடுதல் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 9382961000

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X