பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் நவராத்திரி: மாணவர்கள் கொலு

Added : அக் 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, வெள்ளைகேட் தாமரைதாங்கல் பகுதியில் பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.இங்கு, இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமும் ஒரு பாடம் குறித்த கொலு பொம்மைகள் வைத்து, மாணவர்கள், பெற்றோர் கொண்டாடி வருகின்றனர்.கடந்த 7ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் உருவாக்கிய பொம்மைகள், கொலுவில் வைத்து, தினசரி பூஜை செய்யப்படுகின்றன.தமிழ்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, வெள்ளைகேட் தாமரைதாங்கல் பகுதியில் பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.

இங்கு, இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமும் ஒரு பாடம் குறித்த கொலு பொம்மைகள் வைத்து, மாணவர்கள், பெற்றோர் கொண்டாடி வருகின்றனர்.கடந்த 7ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் உருவாக்கிய பொம்மைகள், கொலுவில் வைத்து, தினசரி பூஜை செய்யப்படுகின்றன.

தமிழ் கதைகளில் ஒன்றான தெனாலிராமன், ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் போன்ற பாடத்திற்கு ஏற்ப, மாணவர்கள் பொம்மைகளை செய்து, ஆசிரியர்கள் முன்னிலையில் அதற்கான விளக்கம் அளித்தனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடை, பள்ளி சேர்மன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் காமேஸ்வரராவ் செய்தனர்.நவராத்திரி விழா நிறைவு நாளில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல வகையான கொலு பொம்மைகள் வைத்து வழிபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X