பொது செய்தி

தமிழ்நாடு

பூஞ்சை காளான் நோய் கட்டுப்படுத்த 'ஐடியா'

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோழி வளர்ப்பில், பூஞ்சை காளான் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் ரா.கோபி கூறியதாவது:'அஸ்பர்ஜில்லோசிஸ்' என அழைக்கப்படும் பூஞ்சை காளான் நோய், இளங்கோழி மற்றும் வான்கோழிகளுக்கு வரும்.பூஞ்சானம் பிடித்த, கெட்டுப்போன தீவனங்களை கோழிகளுக்கு அளிக்கும்போது, பெரிதளவில் பாதிக்கும். இந்நோயால்

கோழி வளர்ப்பில், பூஞ்சை காளான் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் ரா.கோபி கூறியதாவது:'அஸ்பர்ஜில்லோசிஸ்' என அழைக்கப்படும் பூஞ்சை காளான் நோய், இளங்கோழி மற்றும் வான்கோழிகளுக்கு வரும்.பூஞ்சானம் பிடித்த, கெட்டுப்போன தீவனங்களை கோழிகளுக்கு அளிக்கும்போது, பெரிதளவில் பாதிக்கும்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகள் மூச்சுத்திணறல், கழிச்சல், தீவனம் சாப்பிடாமல் சிரமப்படும்; அளவு குறையும்.கோழிகளின் எடை குறைந்து, முட்டை போடுவதும் குறையும். இந்த அறிகுறி இருந்தால் நடக்கும்போது தள்ளாடும்.அப்படியிருந்தால் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை, கோழி வளர்க்கும் விவசாயிகள் நாட வேண்டும். கொட்டகை தரையில் போட்டிருக்கும் உமி அல்லது பொட்டு கூளம் மற்றும் தீவனத்தை அகற்ற வேண்டும்.

பூஞ்சை காளான் பாதிக்காத தரமான தீவனம் மற்றும் சுத்தமான தண்ணீரை, கோழிகளுக்கு கொடுக்க வேண்டும்.உலர்ந்த கூளத்தை, தரை விரிப்புக்கு பயன்படுத்தலாம். மேற்கண்ட தொழில்நுட்பம் செய்வதால், கோழிகளுக்கு பூஞ்சை காளான் நோய் தாக்கத்தில் இருந்து கோழிகளை காத்து, இழப்பு இன்றி வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 75300 52315

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X