பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் - லாரி மோதல்: 20 பேர் காயம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஆயக்குடி : பழநி அமரபூண்டி சாலையில் ரூக்குவார்பட்டி அருகே நான்கு வழி சாலைக்கான பணிகள் நடக்கின்றன. நேற்று வேப்பன்வலசு பகுதியில் இருந்து பழநிக்கு அரசு பஸ் வந்தது. கொண்டம நாயக்கன் பட்டியை சேர்ந்த சின்னசாமி 50, பஸ்சை ஓட்டி வந்தார்.நான்கு வழி சாலைப் பணிக்காக சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. வடமாநிலத்தில் தனந்தரா என்ற பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் பதி 35, அதனை

ஆயக்குடி : பழநி அமரபூண்டி சாலையில் ரூக்குவார்பட்டி அருகே நான்கு வழி சாலைக்கான பணிகள் நடக்கின்றன.

நேற்று வேப்பன்வலசு பகுதியில் இருந்து பழநிக்கு அரசு பஸ் வந்தது. கொண்டம நாயக்கன் பட்டியை சேர்ந்த சின்னசாமி 50, பஸ்சை ஓட்டி வந்தார்.நான்கு வழி சாலைப் பணிக்காக சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. வடமாநிலத்தில் தனந்தரா என்ற பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் பதி 35, அதனை ஓட்டி வந்தார்.

இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் பஸ் பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 9 பேர் பழநி அரசு மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X