அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு': கவர்னரிடம் அண்ணாமலை புகார்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சந்திந்து பேசினார்.பின், அண்ணமாலை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., பா.ஜ., தொண்டரை அடித்தது மட்டும் அல்லாமல், பொது மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களை பறித்து சென்றிருக்கிறார்.
BJP, Annamalai, TN Governor, ஆளுநர்,கவர்னர்,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சந்திந்து பேசினார்.

பின், அண்ணமாலை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., பா.ஜ., தொண்டரை அடித்தது மட்டும் அல்லாமல், பொது மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களை பறித்து சென்றிருக்கிறார். கடலுார் தி.மு.க., - எம்.பி., நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், எம்.பி.,யும், அவரின் உதவியாரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



தி.மு.க.,வை சேர்ந்த கடலுார், திருநெல்வேலி எம்.பி.,க்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதை கவர்னர் கண்காணிக்க வேண்டும் என்றும், கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, சுரங்க கொள்ளை என தற்போதே அராஜகம் தலைதுாக்குகிறது. அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்ய எச்சரிக்கை விட வேண்டும் என்று கவர்னரை சந்தித்து முறையிட்டு உள்ளோம்.

கோவையில் பா.ஜ.,வை சேர்ந்தவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
13-அக்-202113:34:56 IST Report Abuse
radha வாழ்க்கை சீரியஸா போயிட்டு இருக்கும்போது இந்த மாதிரி ஒரு காமெடி பீஸ் இருந்ததால் மன அழுத்தம் குறையும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
13-அக்-202113:10:50 IST Report Abuse
Dhurvesh UP கவர்னரிடம் கொடுக்க வேண்டிய கடிதம் தவறுதல் இங்கே , இதை கூட அறியாத பிஜேபி
Rate this:
Cancel
13-அக்-202112:58:05 IST Report Abuse
ராமகிருஷ்ணன் விடியல் ஆட்சிக்கு சொம்படிக்கும் ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிட மாட்டார்கள், 2 திமுக MP க்கள் கொலை வழக்கில் சிக்கி உள்ளனர், எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லையே. மற்ற கட்சிகள் சம்பந்தப்பட்ட தவறுகள் என்றால் கூட்டமாக ,,,,,,!. அண்ணாமலை சொல்வதில் எந்த தவறும் இல்லை. 550 பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றி கட்டமைக்கப்பட்ட திமுக அரசு உடனடியாக கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X