பொது செய்தி

இந்தியா

நக்சல் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு; ஆவணங்களை அள்ளியது என்.ஐ.ஏ.,

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில், சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல்கள் மற்றும் அவர்களின் வீடு என 20 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வனப் பகுதியில் 2016ல், நக்சல்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டனர்.விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த நக்சல் தலைவன் காளிதாசின் கூட்டாளிகள்,

தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில், சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல்கள் மற்றும் அவர்களின் வீடு என 20 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர்.



latest tamil news



கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வனப் பகுதியில் 2016ல், நக்சல்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டனர்.விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த நக்சல் தலைவன் காளிதாசின் கூட்டாளிகள், ரகசிய கூட்டம் நடத்தி, ஆயுத பயிற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகினர்; மற்றவர்கள் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து, கேரள மாநிலம், எடக்கரா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவர்கள் செப்., 28ல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.போலீசாரால் கட்டுக் கொல்லப்பட்ட நக்சல்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் வீடுகளில், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


latest tamil news



சென்னை, கோவை, தேனி, பெரியகுளம், சேலம், கிருஷ்ணகிரி என 12 இடங்களில், நேற்று காலை 6:30ல் இருந்து, மாலை 3:30 வரை அதிரடி சோதனை நடந்தது.அதேபோல, கேரளா, கர்நாடக மாநிலத்தில் எட்டு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் நக்சல்கள் தொடர்பான புத்தகங்கள், சதி திட்டத்திற்கான அறிக்கைகள், 'பென் டிரைவ்' மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சமீபத்தில், கோவையைச் சேர்ந்த பல் டாக்டர் தினேஷ் என்ற நக்சல் கைது செய்யப்பட்டார். இவர் அளித்த வாக்குமூலத்தின்படி, கோவை, சுங்கம், காமராஜர் வீதியைச் சேர்ந்த டேனிஷ், 32; பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சந்தோஷ், 35 ஆகியோர் வீடுகளிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல, கேரளாவில் 2019ல் நக்சல் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது சொந்த ஊரான, சேலம் மாவட்டம், கே.என்.புதுாரில் மணிவாசகத்தின் சகோதரி வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பாவலர் தெருவில் வசிப்பவர் தங்கம். இவரது மனைவி ஜெமீலா; கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் கார்த்திக், 35, பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் இறந்து விட்டார்; ஜெமீலா மட்டும் உள்ளார். இந்த வீட்டிலும் சோதனை நடந்தது. கார்த்திக் தற்போது நக்சல் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பெரியகுளம் அருகே முருகமலை வனப் பகுதியில், ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில், கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகன் வீட்டிலும் சோதனை நடந்தது.


மாயமானவர் 'மாவோயிஸ்ட்' ஆனார்!


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ், 37. இவர், 2014ல் காணாமல் போனதாக, அவரது தந்தை அர்ஜுனன், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.இதுகுறித்து விசாரித்த போலீசார், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சந்தோஷ் இணைந்து, கேரள மாநிலம், வயநாடு பகுதியில் இருப்பதாகவும், தமிழக பகுதிகளில் உள்ளவர்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவரது வீட்டில், கேரள மற்றும் தமிழக போலீசார் அவ்வப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பிப்., மாதம், கேரள போலீசார், சந்தோஷ் பெற்றோரிடம், 'மாவோயிஸ்ட்கள் மறுவாழ்வு திட்டம்' குறித்து தெரிவித்தனர். மேலும், அவர் வீட்டுக்கு வந்து சென்றாரா என, விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள், சந்தோஷ் வீட்டில் சோதனை நடத்தினர். காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரை நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-202113:48:08 IST Report Abuse
kulandai kannan PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
13-அக்-202113:48:27 IST Report Abuse
kulandai kannan தமிழ்நாட்டு மீடியாக்களையும் சோதனை செய்யலாம்.
Rate this:
Cancel
13-அக்-202113:48:23 IST Report Abuse
kulandai kannan தமிழ்நாட்டு RBS மீடியாக்களையும் சோதனை செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X