சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.9,000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : வீட்டு மனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க, 9,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர், ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 35; இன்ஜினியர். இவர், தன் பெயரிலும், தாயார் பெயரிலும் உள்ள மூன்று பிளாட்களை, வரன்முறைப்படுத்த யூனியன் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த துணை பி.டி.ஓ., சாமிநாதன், 55, மூன்று மனைப்

தஞ்சாவூர் : வீட்டு மனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க, 9,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 35; இன்ஜினியர். இவர், தன் பெயரிலும், தாயார் பெயரிலும் உள்ள மூன்று பிளாட்களை, வரன்முறைப்படுத்த யூனியன் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த துணை பி.டி.ஓ., சாமிநாதன், 55, மூன்று மனைப் பிரிவுக்கும் அங்கீகாரம் அளிக்க, 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனந்தன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

நேற்று முன்தினம் இரவு, 9,000 ரூபாயை சாமிநாதனிடம் ஆனந்தன் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜி தலைமையிலான போலீசார், சாமிநாதனை கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X