பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : ''பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.கரூர் நகராட்சிக்குட்பட்ட, பசுபதிபாளையம் பகுதியில் துாய்மை கரூர் திட்டத்தின் கீழ் பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி

கரூர் : ''பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட, பசுபதிபாளையம் பகுதியில் துாய்மை கரூர் திட்டத்தின் கீழ் பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி மூலம், 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும், 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததே. மேலும், மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரிக்கவில்லை. தற்போது, 3,500 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\

கடந்த ஆட்சியை விட, 70 சதவீதம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. கரூர் நகராட்சியில், 11 ஆயிரத்து, 575 தெருவிளக்கு மின் கம்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் நீண்ட காலமாக பழுதடைந்து கிடந்த, 3,550 மின் கம்பங்கள் கடந்த, நான்கு மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. 100 மீட்டருக்கு ஒரு மின்கம்பம் என்ற அடிப்படையில், கரூர் நகராட்சியில், 2,300 புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X