பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பஞ்., கவுன்சிலர் தேர்தல்; 12,191 ஓட்டுகளில் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : மாவட்ட பஞ்., வார்டு எண், 8ல், தி.மு.க., வேட்பாளர், 12,191 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல் எண்ணிக்கையின்போது, தி.மு.க., -அ.தி.மு.க.,வினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட பஞ்., கவுன்சிலர் வார்டு எண், 8ன், ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இங்கு, 56 ஓட்டுச்சாவடிகளில் மொத்தம், 26,861 ஓட்டுகள்

கரூர் : மாவட்ட பஞ்., வார்டு எண், 8ல், தி.மு.க., வேட்பாளர், 12,191 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல் எண்ணிக்கையின்போது, தி.மு.க., -அ.தி.மு.க.,வினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட பஞ்., கவுன்சிலர் வார்டு எண், 8ன், ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இங்கு, 56 ஓட்டுச்சாவடிகளில் மொத்தம், 26,861 ஓட்டுகள் பதிவாகின.

ஒவ்வொரு சுற்று முடிவிலும், தி.மு.க., தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க., வேட்பாளர் கண்ணையன், 18 ஆயிரத்து, 762 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் தானேஷ் முத்துக்குமார்,- 6,571 ஓட்டுகளும் பெற்றனர். அ.தி.மு.க., விட 12 ஆயிரத்து, 191 ஓட்டுகள் கூடுதலாக, தி.மு.க., பெற்றது. மேலும், பஞ்., வார்டு உறுப்பினர் தேர்தலில்,

அரவக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாடி பஞ்., வார்டு, 10 உறுப்பினராக மல்லிகாவும், க.பரமத்தி ஒன்றியம் க.பரமத்தி பஞ்., வார்டு, 8, உறுப்பினராக சுமதி, புன்னம் பஞ்., வார்டு, 4, உறுப்பினராக ஜோதிராஜ், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பிள்ளாபாளையம் பஞ்., வார்டு, 8 உறுப்பினராக சக்திவேல், கடவூர் ஒன்றியத்தில், காளையபட்டி வார்டு, 1ல், மஞ்சுளா, வார்டு, 5ல் சுதா, வார்டு, 6ல் உமாசங்கர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X