பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம் பணி; விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சேபனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
குளித்தலை : குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., காவிரி ஆற்றில் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை சார்பில், முன் நுழைவு அனுமதி வழங்க வேண்டி அறிவிப்பு செய்யப்பட்டது.இதில், சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள நிலத்தை வழங்குவது தொடர்பாக கிராம மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின், எழுத்து மூலமாகவோ நேரிலோ அல்லது தபால் மூலமோ, 15

குளித்தலை : குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., காவிரி ஆற்றில் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை சார்பில், முன் நுழைவு அனுமதி வழங்க வேண்டி அறிவிப்பு செய்யப்பட்டது.

இதில், சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள நிலத்தை வழங்குவது தொடர்பாக கிராம மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின், எழுத்து மூலமாகவோ நேரிலோ அல்லது தபால் மூலமோ, 15 தினங்களுக்குள் தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டுமென டவுன் பஞ்., விளம்பர பலகையில் வருவாய்த்துறையினர் விளம்பரம் செய்தனர் .

இத்தகவலை அறிந்த மருதுார், மேட்டு மருதுார், வீரம்பூர், கூடலுார் மற்றும் ராஜேந்திரன் பஞ்.,க்கு உட்பட்ட கிராம மக்கள், தீவிர விவசாயி சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிச்சைகண்ணு ஆகியோர் தலைமையில் நேற்று காலை டவுன் பஞ்., அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

அப்போது, சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளக் கூடாது. மேலும் அதே பகுதியில், 750 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை திட்டம் அமைக்க உள்ளது. ஆகவே இரண்டு பஞ்., கிராம மக்கள் சார்பில் ஆட்சேபனை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து, பொதுமக்கள் குளித்தலை தாசில்தாரிடம் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X