பொது செய்தி

இந்தியா

5 ராணுவத்தினர் பலிக்கு பழி தீர்க்கணும்: சிவசேனா வலியுறுத்தல்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை : 'ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினர் ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை பழி வாங்க வேண்டும்' என, சிவசேனா வலியுறுத்தியுள்ளது. சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் நீக்கப்பட்ட பின், பாக்., ஆதரவாளர்கள் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.பல

மும்பை : 'ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினர் ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை பழி வாங்க வேண்டும்' என, சிவசேனா வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் நீக்கப்பட்ட பின், பாக்., ஆதரவாளர்கள் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.பல மதங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீருக்குள் நுழைய அஞ்சும் சூழலை பயங்கரவாதிகள் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பள்ளி ஆசிரியர், காஷ்மீர் பண்டிட் உள்ளிட்ட பலர் இறந்துள்ளனர். இது, 1990ல் ஆயிரக்கணக்கான பண்டிட்டுகளை வலுக்கட்டாயமாக காஷ்மீரில் இருந்து வெளியேற்றிய சூழலை நினைவூட்டுகிறது.சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் ஐந்து பேர் இறந்துள்ளனர்.


latest tamil news



ராணுவத்தினர் சிந்திய ரத்தம் காய்வதற்குள், ஐந்துக்கு, ஐந்து மடங்கு பயங்கரவாதிகளை பழி தீர்க்க வேண்டும். அப்போது தான் இந்தியர்களின் மனம் அமைதி அடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் ராணுவத்தினர் பலியானதை கண்டித்து காஷ்மீரில், சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணியினர், பாக்., பிரதமர் இம்ரான் கான் உருவப்பொம்மையை எரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
13-அக்-202115:10:46 IST Report Abuse
M.COM.N.K.K. உருவ பொம்மையை எரிப்பதில் எந்த பலனும் இருக்காது பலுசிஸ்தானை கையில் எடுங்கள் அதுதான் ஒரே வழி.இந்த வழியை இந்தியா பின்பற்றாதவரை அவர்கள் திருந்தப்போவதில்லை.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
13-அக்-202112:36:02 IST Report Abuse
Suppan பதிலடி கொடுத்தால் உங்களின் "தோழமைக்" கட்சிகள் அதற்கு சான்று கேட்பார்கள். பிறகு மனித உரிமை மீறப்பட்டது என்று கதறுவார்களே
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-அக்-202112:03:46 IST Report Abuse
Anand சிவசேனா கொஞ்சம் சூதானமா பார்த்து பேசுங்க, பொறவு சரத் பவார் இத்தாலி மாபியா இணைக்கு கோவம் வந்து ஆட்சிக்கு ஆப்பு வைத்துவிடப்போகிறார்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X