க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வெற்றி| Dinamalar

தமிழ்நாடு

க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
கரூர் : க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்-8ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற நிலையில், மிக சொற்ப ஓட்டுகளை பெற்று, அ.ம.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலி இடங்களுக்கு ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், க.பரமத்தி ஒன்றியம் கவுன்சிலர் வார்டு எண்-8 ல், தி.மு.க., நவீன்ராஜ்,

கரூர் : க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்-8ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற நிலையில், மிக சொற்ப ஓட்டுகளை பெற்று, அ.ம.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலி இடங்களுக்கு ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், க.பரமத்தி ஒன்றியம் கவுன்சிலர் வார்டு எண்-8 ல், தி.மு.க., நவீன்ராஜ், அ.தி.மு.க., செல்வராஜ் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே, தி.மு.க., வேட்பாளர் முன்னிலையில் இருந்தார்.

தேர்தலில் பதிவான, 3,878 ஓட்டுகளில், 28 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.தி.மு.க., வேட்பாளர் நவீன்ராஜ், 2,389 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், 1,389 ஓட்டுகளும் பெற்றனர். அ.தி.மு.க., வேட்பாளரை விட, தி.மு.க., வேட்பாளர், 1,000 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அ.ம.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணன், 7 ஓட்டுகளும், தே.மு.தி.க., வேட்பாளர் பரமசிவம், 16 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி ஜெயக்குமார், 31 ஓட்டுகளும் பெற்று படுதோல்வியடைந்தனர்.சுயேட்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிட்ட மணிகண்டன், ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X