வேளாண் கல்லூரியில் நடப்பு ஆண்டு வகுப்புகள்: செந்தில்பாலாஜி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் கல்லூரியில் நடப்பு ஆண்டு வகுப்புகள்: செந்தில்பாலாஜி தகவல்

Added : அக் 13, 2021
Share
கரூர் : ''புதிய வேளாண் கல்லுாரியில், நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில், மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து, 1,093 பயனாளிகளுக்கு, 58.24 கோடி ரூபாய் மதிப்பிலான

கரூர் : ''புதிய வேளாண் கல்லுாரியில், நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில், மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து, 1,093 பயனாளிகளுக்கு, 58.24 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கி உள்ளது. கல்வி கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் ஏழை, எளிய மாணவ,- மாணவிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்க முன்வாருங்கள். அவர்களுக்கு கடனுதவி வழங்க ஏதேனும் உத்தரவாதம் தேவைப்பட்டால், அதற்காக நானே கையெழுத்திட தயாராக உள்ளேன். கல்விக்கடன் பெற்று கட்ட இயலாத சூழலில், அவர்களுக்கான கல்விக் கடனை நானே செலுத்துகிறேன்.

எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து விட்டோம்; இனிமேல் கடனுதவி வழங்க இயலாது என்ற காரணங்களை சொல்லி, அவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விடாமல், கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன், விவசாயக்கடன், குறு, -சிறு தொழில் தொடங்குவதற்காக கடனுதவி கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடனுதவி வழங்கிட வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, புதிய வேளாண் கல்லுாரி அமைக்க ஆணையிட்டுள்ளனர். இந்த ஆண்டே வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ஜார்ஜ்பாபு லாசர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X